டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர், வீராங் கனைகள் குறிப்பிடத்தக்க தடங்களைப் பதிக்க உள்ளனர். அந்த வீரர், வீரங்கனைகள் யார்?
இந்தியா சார்பில் 119 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களில் 67 பேர் ஆண்கள், 52 பேர் பெண்கள். ஒலிம்பிக்கில் இந்தியாவின் அதிகபட்ச என்ணிக்கை இதுதான். 2016 ரியோ ஒலிம்பிக்கில் 117 பேர் பங்கேற்றனர்.
முதன் முறையாகக் குதிரையேற்றப் போட்டியில் இந்தியா பங்கேற்கிறது. ஃபுவாத் மிர்சா என்கிற 20 வயது வீரர் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்.
இதுவரை வாள்வீச்சுப் போட்டியில் இந்தியர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்கிற குறையைத் தீர்க்கிறார் சென்னையைச் சேர்ந்த பவானிதேவி.
பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்கும் முதல் வீராங்கனையாகிறார் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன்.
நீச்சல் போட்டியில் பங்கேற்கும் சஜன் பிரகாஷ் ‘ஏ’ தகுதி நிர்ணய நேரத்தின்படி தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார்.
20 கி.மீ. நடைப்போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை என்கிற சிறப்பை பாவனா ஜாட் பெறுகிறார்.
பாட்மிண்டன் இரட்டையர் போட்டியில் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை முதன் முறையாக விளையாடுகிறது.
பாய்மரப் படகுப் போட்டியில் லேசர், 49இஆர் என ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் இந்தியா பங்கேற்பது இதுவே முதன்முறை.
முதன்முறையாக டென்னிஸில் ஆடவர்கள் யாருமின்றி (சானியா மிர்ஸா - அங்கிதா ரெய்னா இணை) வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago