ஜூலை 9: கரீபியன் பெருங் கடலில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனேல் மாய்ஸும் அவருடைய மனைவியும் மர்ம நபர்களால் படுகொலை செய்யப் பட்டனர்

By தொகுப்பு: மிது

ஜூலை 9: கரீபியன் பெருங் கடலில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனேல் மாய்ஸும் அவருடைய மனைவியும் மர்ம நபர்களால் படுகொலை செய்யப் பட்டனர்.

ஜூலை 9: டெல்டா பிளஸ் கரோனா வகையைவிட அபாயகரமான ‘லம்படா’ வகை 30 நாடுகளில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11: இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத் தலைநகர் திருவனந்த புரத்தில் தொடங்கப்பட்டது.

ஜூலை 11: கோபா-அமெரிக்கக் கால்பந்துப் போட்டியின் இறுதி யாட்டத்தில் பிரேசில் அணியை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றது.

ஜூலை 11, 12: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் பட்டத்தை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டியும் ஆடவர் பட்டத்தை செர்பியாவின் ஜோகோவிச்சும் வென்றனர்.

ஜூலை 12: லண்டனில் நடைபெற்ற யூரோ கால்பந்து கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி அணி கோப்பையை வென்றது.

ஜூலை 14: இதுவரை 431 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 14 ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறார் கிறிஸ் கெய்ல்.

ஜூலை 14: 1983இல் இந்தியா உலகக் கோப்பை வெல்ல காரணமாக இருந்த கிரிகெட் வீரர்களில் ஒருவரான யஷ்பால் ஷர்மா (66) காலமானார்.

ஜூலை 15: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையைத் தாக்கல் செய்தது.

ஜூலை 16: மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலை மையில் அனைத்துக் கட்சிக்குழு டெல்லியில் நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்