ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 6,100 காலியிடங் களுக்கான பயிற்சிப் பணியாளர் தேர்வு 2021 நடைபெறவுள்ளது. தகுதியான தேர்வர்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ sbi.co.in இணையதளத்தில் ஜூலை 26 வரை விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கத் தகுதி
பல்கலைக்கழகம் / கல்வி நிலையம் வழங்கிய பட்டம். அக்டோபர் 31 2020இல் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். பட்டியலின பிரிவினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் சலுகைகள் பொருந்தும்.
தேர்வு முறை
இணையவழித் தேர்வு, பிராந்திய மொழியில் தேர்வு எழுதுவது ஆகிய வழிகளில் பயிற்சிப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பொது ஆங்கிலம் தவிர, மற்ற கேள்விகள் ஆங்கிலம், இந்தியில் இருக்கும். சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையிலான கேள்விகளுக்குத் தவறான பதில்களைத் தேர்ந்தெடுத்தால் மதிப்பெண் குறைக்கப்படும். இணையவழித் தேர்வு ஆகஸ்ட் 2021இல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவு / இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு / பொருளாதாரரீதியாக பின்தங்கிய பிரிவு விண்ணப்பதாரர்கள் பயிற்சிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 300 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பட்டியலின/பழங்குடியின/மாற்றுத் திறனாளிப் பிரிவு விண்ணப்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago