கோவிட் 19-க்கு எதிரான தடுப்பு ஊசியைச் செலுத்திக்கொள்வதால் தோல் ஒவ்வாமை ஏற்படுமா?
டாக்டர் கு. கணேசன், பொதுநல மருத்துவர்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவருக்குமே தோல் ஒவ்வாமை ஏற்படாது. அரிதாக மிகச் சிலருக்குத் தோலில் தடிப்புகள் தோன்றலாம்.
தடுப்பூசி செலுத்திக் கொண்டதுமே இது ஏற்படுவ தில்லை என்பதால் உடனே கணிக்க முடிவதில்லை. தோல் ஒவ்வாமை ஏற்பட்டவர்களுக்குப் பொதுவாக இரண்டாம் நாள்தான் தோலில் தடிப்புகள் தோன்றியுள்ளன.
தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஏற்படுகிற காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்றவற்றைப் போலத்தான் இந்த ஒவ்வாமையும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொண்டால் இது இரண்டு, மூன்று நாட்களில் சரியாகிவிடும். உடல் முழுக்கத் தடிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஊசிமூலம் ஒவ்வாமையை மட்டுப்படுத்தலாம்.
அதனால், தோல் ஒவ்வாமை ஏற்படுகிறதே என்று அச்சப் பட்டுக்கொண்டு தடுப்பூசியைத் தவிர்ப்பது நல்லதல்ல.
தொகுப்பு: ப்ரதிமா
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago