ஜூன் 11: பிட்காயினைச் சட்டபூர்வ நாணயமாக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்ட முதல் நாடாகியுள்ளது மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடார்

By தொகுப்பு: மிது

ஜூன் 11: பிட்காயினைச் சட்டபூர்வ நாணயமாக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்ட முதல் நாடாகியுள்ளது மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடார்.

ஜூன் 12: நெதர்லாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான மகளிர் 10 ஆயிரம் மீ. ஓட்டத்தை எத்தியோப் பியாவைச் சேர்ந்த லெட்சென்பெட் கிடி 29:01:03 நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.

ஜூன் 13: கரோனா தடுப்பூசிகளை அதிகம் வீணடித்த மாநிலங்களில் ஜார்கண்ட் முதலிடம் பெற்றது. சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

ஜூன் 14: இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி தர அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு மறுத்து விட்டது.

ஜூன் 15: சீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலையைப் படம் பிடித்த 18 வயது இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியர் புலிட்சர் விருதின் சிறப்புப் பரிசுக்குத் தேர்வானார்.

ஜூன் 15: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் அனைத்துக்கும் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம் என்கிற புதிய விதிமுறை அமலுக்கு வந்தது.

ஜூன் 15: தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இரண்டாம் கட்டமாக ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் தொடங்கியது.

ஜூன் 17: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

ஜூன் 17: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவருடைய 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.

ஜூன் 19: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கரோனா ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்