மே 28: ஐ

By தொகுப்பு: மிது

மே 28: ஐ.நா. பொதுச் செயலாளராக அன்டோனியா குட்டெரஸை மீண்டும் தேர்வுசெய்ய இந்தியா ஆதரவளித்துள்ளது. இவருடைய பதவிக்காலம் டிசம்பர் 31-ஆம் தேதி நிறைவடைகிறது.

மே 29: கரோனா இரண்டாம் அலையில் 577 குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாகி உள்ளதாக மத்திய மகளிர் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மே 29: கரோனா பாதிப்பால் உயிரிழந்த பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்படும், அந்தக் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான செலவை அரசே ஏற்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.

மே 31: துபாயில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய மகளிர் அணி ஒரு தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

ஜூன் 1: சமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது உள்ளிட்ட சேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்தன.

ஜூன் 1: டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பிரிவில் பணியாற்ற இந்திய நடுவர் அசோக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜூன் 2: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்புத் தொகை, இலவச கல்வி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

ஜூன் 2: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் வேற்றுருவத்துக்கு ‘கப்பா’ என்றும் இரண்டாவதாகக் கண்டறியப்பட்ட வைரஸ் வேற்றுருவத்துக்கு ‘டெல்டா’ என்றும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்