அவரே மகான் :

By செய்திப்பிரிவு

ஒருநாள் மவுலானா ஹுசாமுதீன் செய்க் நிசாமூதினிடம் வந்தார். “இன்று ஒரு மகானைச் சந்தித்தேன்" என்றார். மவுலானா ஹுசாமுதீன், நிசாமூதினிடம் எங்கே சந்தித்தீர்கள் என்று கேட்டார்.

“நான் பீபி சாம் சமாதிக்குச் சென்றிருந்தேன். அது குளத்துக்கு அருகே உள்ளது. அங்கே ஒரு மனிதன் வெள்ளரிக் காய்களை தலையில் சுமந்துவந்து குளத்தின் அருகில் வைத்தான். வெள்ளரிக் கூடையை தரையில் வைத்து கை, கால்களை சிரத்தையாக குளத்தில் சுத்தம் செய்தார். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அவன் அதை முடித்தபின்னர் மிகச் சிரத்தையாக பிரார்த்தித்தார். அடுத்தாற்போல, திரும்ப நீருக்குச் சென்று தனது கூடையை மூன்று முறை கழுவினார். ஒவ்வொரு வெள்ளரிக்காயாக எடுத்து அலசினார். மீண்டும் பிரார்த்தனை சொல்லி அவற்றை கூடையில் வைத்தார். அப்புறம் கூடையைத் தூக்கி மூன்று முறை குளத்தில் முக்கி எடுத்தார். பின்னர் தண்ணீர் வடிவதற்காக கூடையை எடுத்து வைத்தார். ஒரு தியானத்தைப் போல அவர் எல்லா செயல்களையும் செய்ததைப் பார்த்து மிகவும் வியந்துபோய் எனது தலைப்பாகையில் உள்ள வெள்ளி நாணயத்தை எடுத்து அவரிடம் போய் கொடுத்தேன்.

குருவே எனது எளிய காணிக்கையை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவர் என்னை மன்னிக்கச் சொல்லி வாங்க மறுத்துவிட்டார்.

“எனது தந்தையும் இதே வேலையைச் செய்தார். எனக்குச் சிறுவயதாக இருக்கும்போதே எனது தந்தை இறந்துபோய்விட்டார். எனது அம்மாதான் கடவுளை வழிபடுவதற்கான விதிகளையும் ஐந்து முறை தொழுகை செய்வதையும் கற்றுத்தந்தார். அவரது கடைசி நிமிடங்களில் என்னைக் கூப்பிட்டு ஒரு துணி முடிச்சை எடுத்துவரச் சொன்னார். அதை எடுத்துத் திறந்து குறிப்பாக எதையோ செய்துவிட்டு, இதுதான் சடலத்தின் மீது போர்த்துவதற்கான துணியைத் தயார் செய்யும், சடலத்தை குவும், சமாதியில் வைக்கும் முறை என்று கூறினார். அதன்பின்னர் எனக்கு 20 திர்ஹாம் பணம் கொடுத்து இதுதான் உனக்கு நான் கொடுக்கும் ஒரே சொத்து என்று கூறினார். ‘உனது தந்தை தோட்டத்துக்குச் சென்று வெள்ளரிகள், காய்கறிகளைப் பறித்து அவற்றை தினசரி விற்பார். அப்படித்தான் அவர் தனது முழு வாழ்க்கையையும் செலவிட்டார். நீயும் அதைத் தவிர வேறெதையும் பிழைப்புக்காகச் செய்யாதே.’ என்று கூறி மரித்தார்.”

செய்க் நசுருதீன் மறுபடியும் சொல்லத் தொடங்கினார்.

“அந்த மனிதன் தன் கதையைச் சொல்லி முடித்தபோது அவர்தான் மகான் என்று நான் உணர்ந்தேன். யாரிடமிருந்தும் எதையும் அவர் வாங்குவதில்லை. கடவுள் அவரிடமும் பக்தியுள்ள எல்லாரின் மேலும் கருணையாக இருக்கட்டும்.” என்று முடித்தார் செய்க் நசுருதீன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்