மார்ச் 26: வங்கதேச சுதந்திரப் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதையொட்டி வங்கதேசத்தின் டாக்கா - மேற்குவங்கத்தின் புதிய ஜல்பய்குரி இடையே புதிய பயணிகள் ரயில் தொடங்கப்பட்டது.
மார்ச் 28: ஒரு நாள் கிரிக்கெட்டில் 5,000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய இணை என்கிற பெருமையை ரோஹித் சர்மா-ஷிகர் தவான் ஜோடி பெற்றது. இதற்கு முன் இந்தப் பெருமையை சச்சின் டெண்டுல்கர் - சவுரவ் கங்குலி ஜோடி பெற்றிருந்தது.
மார்ச் 29: சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட எவர்கிவன் என்ற பெரிய கப்பல் ஒரு வார கால போராட்டத்துகுப் பிறகு மீட்கப்பட்டது. டிரெட்ஜர்கள், இழுவை படகுகள் மூலம் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.
மார்ச் 30: உலகிலேயே முதன்முறையாக கரோனா தொற்றிலிருந்து விலங்கு களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ‘கார்னிவாக்-கோவ்’ என்ற தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது.
மார்ச் 31: இந்தியாவிலிருந்து சர்க்கரை, பருத்தி ஆகியவற்றை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவெடுத்தது. இந்தியாவிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதில்லை என்று 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவை அந்நாடு கைவிடுவதாக அறிவித்தது. ஆனால், இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏப்.1: நாடு முழுவதும் 45 வயது மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது.
ஏப்.1: இந்திய திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கெனவே பத்மபூஷண், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
ஏப்.1: தமிழகத் தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா 48 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago