சர்வதேச விளையாட்டு பொம்மைசந்தையின் உற்பத்தி மையமாக இந்தியா உருவாக வேண்டும் என்றுபிரதமர் மோடி தொழில்துறையினருக்கு வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவின் முதல் விளையாட்டு பொம்மை கண்காட்சியைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி கூறியதாவது, “சர்வதேச விளையாட்டு பொம்மை சந்தையின் மதிப்பு 100 பில்லியன் டாலர். இதில் இந்தியாவின் பங்களிப்பு என்பது மிக மிகக் குறைவு.
மேலும் இந்தியாவில் விற்பனை ஆகும் பொம்மைகளில் 85% இறக்குமதி செய்யப்பட்டவை யாகவே உள்ளன. எனவே உள்நாட்டு பொம்மைஉற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பொம்மை சந்தையில் சுயசார்புதன்மையை அடைவதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியை தொடங்க வேண்டும்.
இதற்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான மறுசுழற்சி செய்யதக்க பொம்மைகளை உற்பத்தி செய்வதில் தொழில்துறையினர் கவனம் செலுத்த வேண்டும். கைவினை பொம்மைகளின் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.
பின்னர் சென்னபட்டினம், வாரணாசி மற்றும் ஜெய்பூர் உள்ளிட்ட பகுதிகளின் பொம்மை உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார். பாரம்பரிய பொம்மைகளைத் தற்போதைய குழந்தைகளின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி வடிவமைத்து சந்தையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் உள்நாட்டு விளையாட்டு பொம்மை சந்தையை மேம்படுத்த 15 அமைச்சகங்களை உள்ளடக்கிய தேசிய அளவிலான திட்டத்தை அரசு தயார் செய்துள்ளதாகவும், சூழலுக்கு உகந்த பொம்மைகளை உலகுக்கு நாம் ஏற்றுமதி செய் வோம் என்றும் கூறினார்.
இந்திய விளையாட்டு பொருட்கள் வெறுமனே குழந்தைகள் பொழுதுபோக்க பயன்படுபவை மட்டுமல்ல. அவை அறிவியலின்அடிப்படைகளைக் கற்பிப்பவையாகவும் உள்ளன. உதாரணமாக பம்பரம் புவி ஈர்ப்பு மற்றும் சமநிலையை கற்பிக்கின்றன, உண்டிவில் விசையையும், இயக்க ஆற்றலையும் கற்பிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். இந்தக் கண்காட்சி பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை நடக்கிறது. 30 மாநிலங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேலான நிறுவனங்களும்அமைப்புகளும் இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்கின்றன. இந்தக் கண்காட்சியில் குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு களும், விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago