சர்வதேச விமான சேவை மீதான கட்டுப்பாடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கரோனா பரவல் இன்னும் முழுமையாக குறையாத நிலையில் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியதையொட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. விமானம் உட்பட அனைத்துப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.
அதன் பிறகு வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க குறிப்பிட்ட அளவில் விமான சேவைக்கு அனுமதி வழங்கப் பட்டது. அடுத்த சில மாதங்களில் படிப்படியாக விமான சேவை அதிகரிக்கப்பட்டது.
எனினும், இன்னும் முழுமையான சேவைக்கு அனுமதி வழங்கப் படவில்லை. உள்நாட்டு விமானங்களிலும் 100 சதவீத பயணிகளை ஏற்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் சர்வதேச விமான சேவை மீதான கட்டுப்பாடு மார்ச் 31 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago