இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை விடுவித்துள்ளது பிசிசிஐ.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கும் கடைசி டெஸ்ட் வரும் மார்ச் 4-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனிப்பட்ட காரணங்களுக்காக 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஜஸ்பிரித் பும்ரா கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் 4-வது டெஸ்ட் போட்டிக்கான அணித்தேர்வில் அவர் இருக்கமாட்டார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று வீரர் யாருமில்லை
பும்ராவுக்கு பதிலாக மாற்றுவீரர் யாரும் சேர்க்கப்படவில்லை. பும்ரா இல்லாத சூழலில், முகமது சிராஜ் அல்லது உமேஷ் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் டிரா செய்ய வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago