விரிவான, ஆழமான படைப்பு

By செய்திப்பிரிவு

l இந்து தமிழ் இயர்புக் 2021

நல்ல கட்டமைப்போடும் மிக விரிவான ஆழமான செய்திகளோடும் 'இந்து தமிழ் இயர்புக் 2021' வெளிவந்துள்ளது.

இத்தகைய தொகுப்பு நூல்கள் குடிமைப்பணி, ஏனைய போட்டித்தேர்வுகளுக்குத் தயார்செய்யும் போட்டியாளர்களுக்குப் பெருமளவு உதவுகின்றன. 'கூகுள்' போன்ற தேடுதளங்கள், 'விக்கிபீடியா' போன்ற தகவல் களஞ்சியங்களின் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பது உண்மைதான். ஆயினும் 'இயர்புக்' போன்ற கையடக்கத் தொகுப்பின் தேவையை, இவை மாற்றியமைத்து விடவில்லை.

'இயர்புக்'கை முறைப்படி படித்து அடிக்கோடிட்டு நினைவு வைத்துக்கொள்வது தனி அனுபவத்தைத் தரும். ஒரு வகையில் நமது காலண்டரில் இருந்து கிட்டத்தட்ட கழன்று விழுந்துவிட்ட ஓர் ஆண்டு 2020. கரோனா என்னும் பெருந்தொற்று உலகை வீட்டுக்குள் முடக்கிப் போட்டது.

கோவிட்-19 பற்றிய பல்வேறு பயனுள்ள தகவல்களை இந்நூல் தாங்கியுள்ளது சிறப்பு அம்சமாகும். இந்த இயர்புக்கில், 2020ஆம் ஆண்டின் நவம்பர் இறுதிவரை நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் உலக, இந்திய, தமிழகக் கண்ணோட்டத்தில் அடக்கி முறைப்படத் தொகுத்தளித்திருப்பது பாராட்டுக்குரியது.

- ஆர். பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ். (ஓய்வு), ஒடிஷா மாநில அரசின் தலைமை ஆலோசகர் மற்றும் சிந்துவெளி ஆய்வாளர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்