தற்போதைய உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப ஆதிக்கம் என்பது இணையப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டதுதான். ஒவ்வொருவரும் கைபேசியுடனும் இணையத்துடனும்தான் ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்துவருகிறார்கள். அதுவும் கரோனா காலப் பொதுமுடக்கக் காலத்தில் ஆசுவாசப்படுத்திக்கொள்ள மக்களுக்கு உதவியாக இருந்தது, இருந்துவருவது இணையம்தான்.
இன்றைய தேதியில் உலகில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 450 கோடியாக அதிகரித்துள்ளது. உலகில் ஒவ்வொரு நிமிடத்திலும் இணையத்தில் மக்கள் எவ்வளவு நேரம் செயல்பாட்டில் இருக்கிறார்கள் என்பது குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
வாட்ஸ்அப்: நிமிடத்துக்கு 4.16 கோடி தகவல்கள் பகிரப்படுகின்றன.
ஃபேஸ்புக்: நிமிடத்துக்கு 14.7 லட்சம் ஒளிப்படங்களும் 1.50 லட்சம் தகவல்களும் பகிரப்படுகின்றன.
ட்விட்டர்: நிமிடத்துக்கு 319 புதிய பயனாளர்கள் இணைகிறார்கள்.
யூடியூப்: நிமிடத்துக்கு 500 மணி நேர வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன.
இன்ஸ்டாகிராம்: நிமிடத்துக்கு 3.47 லட்சம் ஸ்டோரிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
நெட்ஃபிளிக்ஸ்: நிமிடத்துக்கு 4,04,444 மணி நேர வீடியோக்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
ஸூம் வீடியோ: நிமிடத்துக்கு 2,08,333 பேர் வீடியோ அழைப்பில் பேசுகிறார்கள்.
டிக்டாக்: நிமிடத்துக்கு 2,703 பேர் டிக்டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்கிறார்கள்.
அமேசான்: நிமிடத்துக்கு 6,659 பொருள்கள் வாங்கியவர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
லிங்க்டுஇன்: நிமிடத்துக்கு 69,444 வேலைகளுக்கு விண்ணப்பிக்கப்படுகிறது.
இணைய அழைப்பு: நிமிடத்துக்கு 13,88,889 பேர் வீடியோ கால் செய்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago