பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜெண்டினாவை வெளியேற்றியது சுவீடன்

By செய்திப்பிரிவு

ஹாமில்டன்: பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. ‘ஜி’ பிரிவில் நேற்று ஹாமில்டன் நகரில் உள்ளவைகாடோ மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அர்ஜெண்டினா - சுவீடன் அணிகள் மோதின. இதில் சுவீடன் 2-0 என்றகோல் கணக்கில் வெற்றி பெற்றது. 66-வது நிமிடத்தில்ரெபெக்கா, 90-வது நிமிடத்தில்எலின் ரூபென்ஷன் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர்.

சுவீடன் அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் தனது பிரிவில் 9புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அதேவேளையில் 2-வது தோல்வியை சந்தித்த அர்ஜெண்டினா தொடரில் இருந்து வெளியேறியது. அர்ஜெண்டினா தனது முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்திருந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடித்திருந்தது.

தென் ஆப்பிரிக்கா அசத்தல்: ‘ஜி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றில் கால்பதித்தது தென் ஆப்பிரிக்கா அணி.

பிரான்ஸ் வெற்றி: ‘எஃப்’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் 5-3 என்ற கோல் கணக்கில் பனாமாவை தோற்கடித்தது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 7 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்