இன்று தீபாவாளி பண்டிகை கொண்டாடப் படுகிறது. இதற்காக பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது குறித்த விதிமுறைகளை தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், முதியோர் இல்லம் அருகே பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago