பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தேவர் சிலைக்கு கமுதி தாலுகா மூவேந்தர் பண்பாட்டு கழகம் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் என்.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் டி.திருமால், பொருளாளர் ஜெ.அழகுபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் சங்க நிர்வாகிகள் அமைதி ஊர்வலம் சென்று மேட்டுத்தெருவில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மூவேந்தர் பண்பாட்டுக் கழகம் சார்பில் தேவர் சிலைக்கு பொங்கல் வைத்து, சிறப்பு பூஜை செய்து பொது மக்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மூவேந்தர் பண்பாட்டுக் கழகம் நிர்வாகிகள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், முக்குலத்தோர் சங்க மறவர் இன அறக்கட்டளை தலைவர் செல்லத்தேவர், செயலாளர் லெட்சுமணன், பொருளாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண் டனர்.
தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு முதுகுளத்தூரில் ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் முதுகுளத்தூர் முருகன் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க புறப்பட்டு பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள தேவர் சிலையை வந்தடைந்தது.
பின்னர் தேவர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் முனியசாமித்தேவர் தலைமை வகித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago