தீபாவளிக்குப் புத்தாடை, பட்டாசுகளுடன் பலகாரங்களும் முக்கிய இடம் வகித்து வருகின்றன. முன்பெல்லாம் வீட்டிலேயே இனிப்பு, காரம் உள்ளிட்டவற்றைத் தயாரித்தனர். காலமாற்றத்தால் இளையதலைமுறையினர் பலரும் இதில் ஆர்வம் காட் டவில்லை. முன்னோர்களின் தயாரிப்பு முறைகளையும் பலரும் கற்றுக் கொள்ளவில்லை.
மேலும் தீபாவளி போன்ற கொண்டாட்ட வேளைகளில் குடும்பத்தினருடன் நேரத்தைக் கழிக்க பெண்கள் பலர் விரும்புவதால் கடைகளிலேயே இவற்றை வாங்கும் கலாச் சாரத்துக்கு மாறிவிட்டனர். இதனால் தீபாவளி நேரங்களில் பேக்கரிகளில் இனிப்பு,காரம் உள்ளிட்ட விற்பனை அதிகரித்துவிட்டது.
இந்த, ஆண்டு இனிப்பு, காரங்களுக்கான முன்பதிவுகளைப் பிரபல கடைகள் மேற்கொண்டு வருகின்றன.
வழக்கத்தைவிட கூடுதலாக இவற்றை தயாரிக்க வேண்டி யநிலை ஏற்பட்டுள்ளதால் சமையல் மாஸ்டர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. கரோனாவால் பலரும் வேலை இழந்துள்ள நிலையில் பண்டிகைக்கால பலகார ஆர்டர்களினால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago