வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு - கர்ப்பிணிகள் வருவதை தவிர்க்க வேண்டுகோள் :

By செய்திப்பிரிவு

தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் வரும் 20-ம் தேதி சித்திரைத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுவதாக இருந்தது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மே 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற இருந்த திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து செயல்அலுவலர் வே.சுரேஷ் கூறுகையில், பக்தர்கள் தீச்சட்டி, காவடி, பால்குடம், ஆயிரம் கண்பானை உள்ளிட்ட இதர நேர்த்திக் கடன்களை செலுத்த அனுமதி இல்லை.

முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி வருவதுடன் தேங்காய்பழம் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள், பால் போன்றவற்றை திருக்கோயிலுக்குள் கொண்டு வருவதையும் தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் போன்றோர் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு கோயிலுக்குள் அமர்வதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்