அரிய வகை மரக்கன்றுகளை வளர்க்கும் சில்வார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் :

By செய்திப்பிரிவு

தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி நம்மாழ்வார் அடர் குறுவனத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அழிவின் விளிம்பு நிலையில் ‘சாணிவீரை’ எனும் சந்தன மரத்திற்கு நிகராக அகில் வகை மரக்கன்றுகள் உள்ளன. இவற்றை இங்கு வைத்து பராமரித்து அதன் எண்ணிக்கையை உயர்த்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதற்காக தேனி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் பரிந்துரையின்படி விழுப்புரம் மாவட்டம் ஆரவில் தாவரவியல் பூங்கா நிறுவனத்தின் சார்பில் இரண்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

அதன் நிர்வாகி ஆதிகேசவன், சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் ஆண் மற்றும் பெண் மரக்கன்றுகளை அனுப்பினர். நிகழ்ச்சியில் பெரியகுளம் மாவட்டக் கல்வி அலுவலர் பாலாஜி கலந்து கொண்டு மரக்கன்றுகளையும் அம்மரக்கன்று சார்ந்த தகவல் பலகையையும் நட்டார்.

பின்பு மாணவர் சமுதாயத்திற்கு இது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியை கலைச்செல்வி செய்திருந்தார். தலைமையாசிரியர் மோகன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்