கூடலூர் அருகே பளியன்குடியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு கரோனா விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கம்பம் நேதாஜி அறக்கட்டளை மற்றும் தேனி மாவட்ட நக்சல் தடுப்பு காவல்துறையினரும் இணைத்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு நக்சல் தடுப்புப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் செந்தாமரை தலைமை வகித்தார்.
நேதாஜி அறக்கட்டளை நிறுவனர் சோ.பஞ்சுராஜா முன்னிலை வகித்தார். மலைவாழ் மக்களுக்கு முகக்கவசம், கபசுரக்குடிநீர், குழந்தைகளுக்கு பிஸ்கட் போன்றவைகள் வழங்கப்பட்டது. நக்சல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago