ராமநாதபுரத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடா? : சுகாதாரத்துறை விளக்கம்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்ற இந்த நேரத்தில் ராமநாதபுரத்தில் கோவாக் சின் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதையொட்டி, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தடுப்பூசித் திருவிழா எனும் பெயரில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு வகைகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் பலர் கோவாக்சின் தடுப்பூசியையும், சிலர் கோவிஷீல்டு தடுப்பூசியும் போடுகின்றனர்.இந்தநிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கோவாக்சின் ஸ்டாக் இல்லை. ஆகவே, கோவிஷீல்டு ஊசி போட்டுக் கொள்ளும்படி மருத்துவ ஊழியர் கள் வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந் துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிக ளிடம் கேட்டபோது, கோவாக்சின் தடுப்பூசி குறைந்த அளவே இருப்பு உள்ளது. ஏற்கெனவே முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு 28 நாட்கள் கழித்து 2-ம் கட்டத் தடுப்பூசி போட வேண்டி உள்ளதால் அதற்காக கோவாக்சின் இருப்பு வைத்துள்ளோம். ஆகவே, போதிய அளவு இருப்பு உள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை மற்றவர்களுக்கு போடும்படி கூறினோம் என்றனர். இந்நிலையில், பெரும்பாலானோர் கோவாக்சின் தடுப்பூசியையே போட விரும்புவதால், அந்த தடுப்பூசியை தேவையான அளவு பெற்று இருப்பு வைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்