பயிற்சி புத்தகத்தை வழங்குவதில் குழப்பம் : சிவகங்கையில் ஆசிரியர்கள் தவிப்பு

By செய்திப்பிரிவு

பயிற்சி புத்தகத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் குழப்பம் நீடிப்பதால் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட் டுள்ளன. இதனால் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வழியாக கற்பிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் சில மாதங்கள் பள்ளிகள் செயல்பட்டன. மேலும் மற்ற வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அறிவித்தாலும், மாணவர்களின் கற்றல் திறனை அறிய ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு பயிற்சிப் புத்தகங்களை வழங்கி சோதிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக சிவகங்கை மாவட்ட அரசு பள்ளிகளுக்கு பயிற்சிப் புத்தகம், பிரிட்ஜ் கோர்ஸ் புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன.அந்த புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவது குறித்து முறையாக வழிகாட்டுதல் வழங்கவில்லை. இதனால் புத்தகங்களை மாணவர் களிடம் வழங்குவதா? பெற்றோரிடம் வழங்குவதா? என குழப்பம் உள் ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘ பயிற்சிப் புத்தகத்தை தேர்ச்சி அறிவிப்புக்கு முன்பே வழங்காமல், தாமதமாக வழங்கினர். இனி புத்தகத்தை வாங்க மாணவர்கள், பெற்றோரிடம் ஆர்வம் இருக்காது. பயிற்சிப் புத்தகங்களை வாங்கிச் சென்றாலும் கற்றல் திறனை பரிசோதிப்பதிலும் சிரமம் உள்ளது. ஒருசில மாவட்டங்களில் பயிற்சிப் புத்தகங்களை பெற்றோரிடம் வழங்கும்போது, அவற்றை வாங்க மாட்டோம் என பிரச்சினை செய்து வருகின்றனர்,’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்