சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அதிகரையைச் சேர்ந்த விவசாயி கரிகாலன் (45). இவர் நேற்று அதிகாலை கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து இளையான்குடி போலீஸார் நடத்திய விசாரணையில் கரிகாலனின் மைத்துனர் மனைவி பத்மாவதி, இளையான்குடி அருகே நெடுங்குளத்தைச் சேர்ந்த சிவா, குமாரக்குறிச்சி யுவராஜ் உள் ளிட்டோருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிவா, யுவராஜ், பத் மாவதி ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago