வகங்கை மாவட்டத்தில் கரோனா பரிசோதனைஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததால் வேதனை :

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்யும் லேப் டெக்னீ சியன்களுக்கு கடந்த மாத ஊதியம் வழங்கப்படவில்லை.

ஆரம்ப சுகாதார நிலைங்களில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2018-ல் ஒப்பந்த அடிப்படையில் 700 லேப் டெக்னீசியன்கள் (கிரேடு -3) நியமிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் 1,508 லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.8 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் பலருக்கு கரோனா பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து கரோனா பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் லேப் டெக்னீ சியன்களுக்கு மார்ச் மாத ஊதியம் வழங்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து லேப் டெக்னீசியன்கள் கூறியதாவது: கரோனா தொற்று உள்ள வர்களிடம் சளி, ரத்த மாதிரிகளை எடுக்கிறோம். மேலும் பரிசோதனை எடுப்பதற்கு எங்களுக்கு பெரும்பாலான நேரங்களில் வாகன வசதி கூட செய்து கொடுப்பதில்லை. இதனால் நாங்கள் சொந்த வாகனத்திலேயே சென்று பரிசோதனை செய்கிறோம். ஆனால், எங்களுக்கு ரூ.8 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கும் நிலையில், அதையும் முறையாக வழங்க மறுக்கின்றனர் என்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதி காரிகள் கூறுகையில், ‘ நிதி ஒதுக்கா ததால் மாநிலம் முழுவதும் ஊதியம் வழங்கவில்லை. நிதி வந்ததும் ஊதியம் வழங்கப்படும்,’ என்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE