கரோனாவால் விழாக்களுக்கு தடை - திருப்புவனத்தில் வாழைத்தார், இலை விலை வீழ்ச்சி :

By செய்திப்பிரிவு

கரோனாவால் விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் வாழைத்தார், இலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருப்புவனம், வீரனேந்தல், தூதை, ஏனாதி, பூவந்தி, திருப்பாச் சேத்தி, கலியாந்தூர், மடப்புரம், மாரநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் வாழைத்தார், இலை திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மதுரை சந்தைகளுக்கு விற்பனைக்குச் செல்கின்றன.

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் பெரிய அளவில் விழாக்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. இதனால் வாழைத்தார், இலை கடுமையான வீழ்ச்சி அடைந்தது. தற்போது ஊரடங்கு தளர்வால் மீண் டும் வாழைத்தார், இலைக்கு கிராக்கி ஏற்பட்டது. சில மாதங்களாகப் படிப் படியாக விலையும் உயரத் தொடங்கியது.

இந்நிலையில் மீண்டும் கரோனா இரண்டாவது அலை காரணமாக கோயில் திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இத னால் வாழைத்தார், இலை தேவை குறைந்துவிட்டது.

இதையடுத்து நாடு, ஒட்டு ரக வாழைத் தார்களை ரூ.30 முதல் ரூ.150-க்கே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அதே போல் ரூ.800 முதல் ரூ.1,500 வரை விற்பனையான இலைக்கட்டு விலையும் ரூ.150 முதல் ரூ.200 ஆக சரிந்தது. இந்த விலை வீழ்ச்சியால் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து பூவந்தி வாழை விவசாயிகள் கூறுகையில், "விழாக் களுக்குத் தடை விதித்ததும் விலை சரியத் தொடங்கியுள்ளது. இதனால் வாழை பயிரிட்டோருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண் டும் இதேபோலத்தான் இழப்பு ஏற் பட்டது. இதேநிலை நீடித்தால் வாழை விவசாயத்தைக் கைவிட வேண்டியது தான்" என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்