சொகுசு காரில்மணல் திருடிய 3 பேர் மீது வழக்கு :

By செய்திப்பிரிவு

கமுதி அருகே சொகுசு காரில் மணல் மூட்டைகளை ஏற்றிவந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மண்டலமாணிக்கம் குண் டாற்றுப் படுகைகளில் சொகுசு கார் களில் மணல் திருடப்படுவதாக போலீ ஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. மண்டலமாணிக்கம் போலீஸார் வீரசோழன் - மண்டலமாணிக்கம்- கூடங்குளம் விலக்கு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரில் இருந்த 3 பேர் போலீஸாரை கண்டதும் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து போலீஸார் காரை சோதனை செய்ததில் 30 மணல் மூட்டைகள் இருந்தன.

இதுதொடர்பாக மண்டல மாணிக்கத்தைச் சேர்ந்த மூக்கூரான்(30), அபிமன்யு(36), சீமான்(26) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்