பழநி அருகே பெத்தநாயக்கன்பட்டியில் உள்ள எஸ்ஆர்ஜி மில் தொழிலாளர்களுக்கு தீ விபத்து தடுப்பு முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் பழநி தீயணைப்புத்துறையினரால் செய்து காண்பிக்கப்பட்டது.
பழநி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் நிலைய அலுவலர் (பொறுப்பு) ஆண்டவராஜ் தலைமையில் நேற்று மில் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில், தீ விபத்து ஏற்படும்போது தொழிலாளர்கள் செய்ய வேண்டியது என்ன, தீயில் இருந்து தன்னையும், மற்றவர்களையும் எவ்வாறு காப்பது, மீட்பது என்பது குறித்த வழிமுறைகள், தீயை அணைக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து தீயணைப்புவீரர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
மேலும் தீ விபத்தின் வகைகள், தீ பாதுகாப்பு, தீயணைப்பான்களில் பயன்பாடுகள், அதை பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து தொழிலாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago