சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் சுகாதாரப் பணியாளர்கள் கவனக்குறைவாக தடுப்பூசி செலுத்தி யதாக அரசு அதிகாரிகள் புலம்பினர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் கரோனா தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் இதுவரை தடுப்பூசி செலுத்தாத அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சுகாதாரப் பணியாளர்கள் எந்த வகை தடுப்பூசி செலுத்த வேண்டும், முதல் தவணையா?, இரண்டாவது தவணையா ? என்று கேட்காமலேயே தடுப்பூசி செலுத்தினர்.
மேலும் தடுப்பூசி செலுத்தியதும் பஞ்சால் ஊசி செலுத்திய இடத்தை சிறிது நேரம் அழுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகவலைக் கூட ஊழியர்கள் தெரிவிக்காததால் வருவாய் அதிகாரி ஒருவருக்கு ஊசி செலுத்தியதும் ரத்தம் வெளியேறிக் கொண்டே இருந்தது. அதன்பிறகே பஞ்சால் அழுத்திக் கொள்ள வேண்டுமென சுகாதார ஊழி யர்கள் தெரிவித்தனர்.
இதைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள், தாங்கள் முதல் தவணையா? இரண்டாவது தவணையா? என்பதை அவர்களாகவே தெரிவித்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்த செல்வோரிடம் ஏற்கெனவே அவர்களுக்கு என்னென்ன நோய்கள், எடுத்துக் கொள்ளும் மருந்துகள் போன்ற விவரங்கள் பெறப்படுகின்றன. அதேபோல் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு பரிசோதித்த பிறகே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எந்த வித தகவலும் பெறாமலும், சொல் லாமலும் தடுப்பூசி செலுத்தியதாக அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago