ஏப்ரல் 21-ம் தேதி முதல் - ராமேசுவரம்-கன்னியாகுமரி சிறப்பு ரயில் :

By செய்திப்பிரிவு

தெற்கு ரயில்வே, மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமேசுவரம் - கன்னியாகுமரி (வண்டி எண் 06165) வாரம் 3 முறை சிறப்பு ரயில் வரும் ஏப்ரல் 21 முதல் மறு அறிவிப்பு வரும் வரை, ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை, திங்கள் கிழமை மற்றும் புதன்கிழமைகளில் இரவு 9 மணிக்குப் புறப்பட்டு மதுரை வழியாக பயணித்து மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு கன்னியாகுமரிக்குச் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி- ராமேசுவரம் (வண்டி எண் 06166) வாரம் மூன்று முறை சிறப்பு ரயில் ஏப்ரல் 22 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கன்னியாகுமரியில் இருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு மதுரை வழியாக பயணித்து மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் ராமேசுவரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் பரமக்குடி ரயில் நிலையத்திலும், கன்னியாகுமரி - ராமேசுவரம் சிறப்பு ரயில் வள்ளியூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்