ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சைபர் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டுள் ளது.
சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தமிழக காவல்துறையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சைபர் கிரைம் யூனிட் என்ற புதிய பிரிவு (இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவு) ஏடிஜிபி வெங்கட்ராமன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) தலைமையில் இப்பிரிவு செயல்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இப்பி ரிவுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண், ஆய்வாளராக சரவணபாண்டி சேதுராயர் (தற்போது ராமநாதபுரம் நகர் காவல் ஆய்வாளர்), சார்பு ஆய்வாளராக திவாகர், தொழில்நுட்பப் பிரிவு சார்பு ஆய்வாளர் ரிச்சட்சன் மற்றும் 5 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரிவு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வருகிறது.
இப்பிரிவு இனிமேல் சைபர் குற்றங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு, விசாரணை போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
மேலும் தற்போது மாவட் டக் குற்றப்பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் உள்ள சைபர் குற்ற வழக்குகளும் இப்பிரிவுக்கு மாற்றப் படும் எனக் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago