சிங்கம்புணரி அருகே மஞ்சு விரட்டில் 5 பேர் காயம் : 200 காளைகள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே நடந்த மஞ்சுவிரட்டில் 200 காளைகள் பங்கேற்றன. இதில் 5 பேர் காயமடைந்தனர்.

சிங்கம்புணரி அருகே மூவன்பட்டியில் முத்தான் கருப்பர் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதையொட்டி கிராம மக்கள் வீதிகளில் ஊர்வலமாக துண்டுகளை எடுத்துச் சென்று முத்தான் கருப்பர் கோயிலில் வழிபாடு செய்தனர். தொடர்ந்து காளைகளுக்கு துண்டு போர்த்தி மரியாதை செலுத்தியதும், தொழுவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

முன்னதாக, விளைநிலங்கள் பகுதியில் கட்டு மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 5 பேர் காயமடைந்தனர். சில காளைகள் வீரர்களை நெருங்க விடாமல் விளையாடின. மஞ்சு விரட்டை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு ரசித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்