தேவகோட்டை அம்மச்சி ஊரணி கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராமநாதன் மகன் ராஜகவுதம் (13). அப் பகுதியில் புறவழிச் சாலையில் உள்ள நாட்டான் கண்மாயில் மீன் பிடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.இதையடுத்து தீயணைப்புத்துறையினர் பலமணி நேரத் தேடுதலுக்குப் பிறகு சிறுவனின் உடலை மீட்டனர். தேவகோட்டை டவுன் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago