தமிழக அளவில் முஸ்லிம்களின் பண்முகப் பண்பாட்டுத் தலங்களை பற்றி பேசும்போது கீழக்கரையும் இடம்பெறும். கீழக்கரையைப் பற்றிப் பேசும்போது வள்ளல் சீதக்காதி, இறைநேசர் சதக்கத்தல்லா ஆகியோர் தமிழ்மரபுடன் கலந்தவர்கள். கீழக்கரை நகரின் தொன்மை, ஆளுமை மற்றும் பண்பாடுகளை விளக்கும் கீழக்கரை வரலாறு என்ற நூல் வெளியிட்டு விழா, சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. தியாகராய நகரில் உள்ள வினோபா அரங்கத்தில் எழுத்தாளர் மஹ்மூது நெய்னா எழுதிய நூலை தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் இப்போது.காம் அமைப்பு இணைந்து வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் சீதக்காதி அறக் கட்டளையைச் சேர்ந்த அஷ்ரப் புஹாரி, தமிழ்மரபு அறக்கட்டளையைச் சேர்ந்த சுபாஷினி ஆகியோர் கலந்து கொண்டு கீழக்கரை வரலாறு நூலின் சிறப்புகள் குறித்து விளக்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago