நத்தம் அருகே வாகன சோதனையில் உரிய ஆவணங் கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.8.71 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட மணக்காட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும்படை அலுவலர் சிதம்பரம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அந்தவழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் வடமதுரையை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் ஓட்டிவந்த காரை சோதனையிட்டதில், காரில் எட்டு லட்சத்து 71 ஆயிரத்து 950 ரூபாய் பணம் உரிய ஆணவங்கள் இன்றி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தொகையை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் நத்தம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago