வாக்காளர்களுக்கானதகவல் சீட்டு வழங்கும் பணி தேனியில் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்குப் பதிலாக வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள 2 லட்சத்து 76 ஆயிரத்து 772 வாக்காளர்கள், பெரியகுளம் தொகுதியில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 617 வாக்காளர்கள், போடியில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 604 பேர், கம்பத்தில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 645 பேர் என மொத்தம் மாவட்டத்தில் 11 லட்சத்து 25 ஆயிரத்து 638 வாக்காளர்களுக்கு அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் வாக்குச்சாவடி விவரம், தேர்தல் தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். ஆனால் இதில் வாக்காளர் களின் புகைப்படம் இருக்காது. இந்த சீட்டை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியாது.

எனவே வாக்குப்பதிவின் போது கடவுச்சீட்டு, ஒட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி மற்றும் அஞ்சல் கணக்குப் புத்தகம், பான்கார்டு, நூறுநாள் வேலைத் திட்ட அடையாள அட்டை, மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், ஆதார் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வாக்குப்பதிவின் போது அடையாள ஆவணமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்