தற்போது கரோனா தொற்று இரண் டாவது அலை உருவாகி உள்ளது. இதற்காக தேர்தலின் போது கரோனா தடுப்பு பணிகளுக்காக சுகாதாரப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தின் நான்கு தொகுதிகளிலும் தலா 30 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் வீதம் 51 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் வீரபாண்டி துணை செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நாளை வழங்கப்படும். எனவே சுகாதார ஆய்வாளர்கள் இவற்றைப் பெற்று சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சேர்க்கவும், வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தல் மையங்களில் உள்ள மருத்துவக் கழிவுகளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி கூறுகையில், சுகாதார ஆய்வாளர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு உபகரணங்களை கொண்டு சென்று தேர்தல் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும் என்றார். உடன் சுகாதாரப்பணிகளின் துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago