தேர்தலுக்கு விடுமுறை தராத நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிவிக்க ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ளது. இதில் நூறு சதவீத வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக தொழிலாளர்கள் வாக்களிக்கும் வகையில் அன்று ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பல நிறுவனங்கள் இதை கடைபிடிப்பதே இல்லை. எனவே இவற்றை கண்கா ணிக்கவும், முறைப்படுத்தவும் ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) குலசேகரன் தலைமையிலான குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் விடுமுறை பின்பற்றாத நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிவிக்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி (04546) 250853 என்ற எண் ணிற்கு விவரங்களைத் தெரிவிக்கலாம். மேலும் பெரியகுளம் பகுதிக்கு தொழி லாளர் துணை ஆய்வாளர் ஆனந்தியை 9943167435 என்ற எண்ணிலும், தேனி தொழிலாளர் உதவி ஆய்வாளர் அறிவழ கனை 9952531972 என்ற எண்ணிலும், போடி தொழிலாளர் உதவி ஆய்வாளர் ராஜாவை 7339541701 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று உதவி ஆணையர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago