ஆண்டிபட்டி சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயில் நிர்வாகம் குறித்து இரு பிரிவினரிடையே சர்ச்சை இருந்து வந்தது. இருவரும் தங்களுக்குத்தான் சொந்தம் என்று உரிமை கோரி வந்ததால் பிரச்னை ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக சித்திரைத் திருவிழா நடக்க வில்லை.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடந்தது. இதில் இக்கோயில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோயில் செயல்அலுவலர் தங்கலதா இக்கோயில் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago