நிலக்கோட்டையில் தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தவர்களுடன் இணைந்து பூப்பறித்துக் கொடுத்து திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் முருகவேல்ராஜன் வாக்கு சேகரித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சியான மக்கள் விடுதலைக் கட்சி போட்டியிடுகிறது. அதன் தலைவர் முருகவேல்ராஜன் வேட்பாளராக களம் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். நிலக்கோட்டை அருகே முருகத்தூரான்பட்டி கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டவர் தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். தானும் சிறிதுநேரம் பூப்பறித்தார்.
நிலக்கோட்டை தொகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை, குளிர்பதன கிடங்கு கொண்டுவரப்படும் என வாக்குறுதியளித்தார். பூ விவசாயிகளின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்படும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago