பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலின் பங்குனித் திருவிழா கடந்த 19-ம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான வண்டி மாகாளி வேடம் அணிந்த ஊர்வலம் கடந்த 23-ம் தேதியும், கடந்த 28-ம் தேதி இரவு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்தாலம்மன் கோயிலின் நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
29-ம் தேதி அதிகாலை முதல் திரளான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நகரில் ஊர்வலமாகச் சென்று பின்னர் கோயிலை வந்தடைந்தனர்.
முக்கியத் திருவிழாவான பால்குட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் வந்து, கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் டிரஸ்டிகள் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago