ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க 96 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற் றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். பொதுத்தேர்தல் பார்வையாளர்கள் சொராப் பாபு (ராமநாதபுரம், முது குளத்தூர் தொகுதிகள்), விசோப் கென்யே (பரமக்குடி), அனுராக் வர்மா (திருவாடானை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 1,647 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன.
அதில், 80 இடங்களில் அமைந்துள்ள 228 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க பொதுத்துறை வங்கி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் 96 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக் கப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடி மையங்களில் பயன் படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களில் காலை 5.30 மணிக்கே வேட்பாளர்களின் முகவர்கள் முன் னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி உறுதி செய்யப்படும்.
வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என்று பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago