ராமநாதபுரம் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 411 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் போக்குவரத்து போலீஸார் நகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு சாலையில் செல்போனில் பேசிக் கொண்டே இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றதாக 16 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் விதிகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்றதாக ஒருவர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 161 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 72 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 20 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 141 பேர் மீதும் என மொத்தம் 411 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ. 65 ஆயிரத்து 100 வசூலிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago