கரை ஒதுங்கிய மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராமேசுவரம் அருகே மண்டபம் வடக்கு கடற்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக 8 மூட்டைகள் கரை ஒதுங்கிக் கிடப்பதாக சுங்கத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று காலை அந்தப் பகுதிக்கு வந்த சுங்கத்துறையினர் கடலில் மிதந்த மூட்டையை மீட்டு சோதனை செய்தனர். சோதனையின்போது அந்த 8 மூட்டைகளில் தலா 50 கிலோ மஞ்சள் வீதம் 400 கிலோ இருந்தது.

முதற்கட்ட விசாரணையில் இந்த மஞ்சள் மூட்டைகளை இலங்கைக்கு படகில் கடத்திச் சென்றபோது கடலில் தவறி விழுந்து மிதந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்