வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த தயார் நிலையில் கரோனா உபகரணங்கள் :

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக் குச்சாவடி மையங்களில் பயன் படுத்து வதற்காக 13.91 லட்சம் பாலீதீன் கையு றைகள், 1729 தெர்மல் ஸ்கேனர் கருவிகள் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தயார்நிலையில் வைக் கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதி வுக்கு அனைத்து முன்னேற்பாடு நட வடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடை பெற்று வருகிறது. தேர்தல் வாக்குப் பதிவுக்காக மாவட்டத்தில் மொத்தம் 1,647 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் குடிநீர், கழிப்பறை, மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்களின் வசதிக்காக சாய்வு தளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மாவட்டத்தில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்திட வேண்டும் என பொதுமக்களுக்கு அறி வுரை வழங்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யவும், கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி திரவம் வழங்கி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்திட பயன்படுத்தும் கைக்கு கையுறை வழங்கிடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கையுறைகளை சேகரித்து முறையே கழிவு மேலாண்மை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 1729 தெர்மல் ஸ்கேனர் கருவிகள், கிருமிநாசினி திரவம் 500 மி.லி அளவில் 11,500 பாட்டில்கள், 100 மி.லி அளவில் 18,000 பாட்டில்கள், 13,91,000 பாலிதீன் கையுறைகள், 50,000 லேட்டக்ஸ் ரப்பர் கையுறைகள், கழிவு மேலாண்மைக்கான 10,000 பைகள், தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்காக 50,000 முகக்கவசங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்