நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு அஞ்சல் தலை வெளியீடு : ராமநாதபுரத்தில் ஆட்சியர் வெளியிட்டார்

By செய்திப்பிரிவு

நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு அஞ்சல் தலையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னி ட்டு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிராமியக் கலைநிகழ்ச்சிகள், பாராசூட் சாகசம், பேரணி, மணல் சிற்பம் உள்ளிட்ட பல்வேறு வகையில் வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா பாதுகாப்பு முன்னெச் ரிக்கையுடன் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்றல், முதன்முறை வாக்காளர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு வாக்காளர்களையும் தேர்தல் நடவடிக்கைகளில் ஊக்குவி த்தல், 100 சதவீத வாக்குப்பதிவு, நேர்மையாக வாக்களித்தல் உள்ளிட்ட நோக்க ங்களை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பணி கள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி ஆட்சியர் அலு வலகத்தில் அஞ்சல் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘எனது அஞ்சல் தலை’ திட்டத்தின் கீழ் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ‘100 சதவீதம் வாக்களிப்போம்’ என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய அஞ்சல் தலையை வெளியிட கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) பிரதீப்குமார் பெற்றுக் கொண்டார்.

மேலும், அரசுத்துறைகளில் அனுப்பப்படும் கடிதங்களில் இந்த அஞ்சல் தலையைப் பயன்படுத்தி விழிப் புணர்வுப் பணிகளை மேற்கொள்ள அலுவ லர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரிகள், அலுவலர்கள், அஞ்சல்துறையினர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்