காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் அருகில் உள்ள சீரணி அரங்கத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அனைவரும் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போடப்பட்டிருந்த ரங்கோலி கோலங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டார். 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களுக்கு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. 'வாக்காளிப்பது நமது உரிமை' என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. கையெழுத்து இயக்கம், விழிப்புணர் பேரணி நடந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago