கடலூர் மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 43 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை கடலூர் மாவட்டத்தில் 25,479 கரோனா தொற்று இருந்தது. நேற்று 43 புதிதாக தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இதுவரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,522 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் மொத்தமாக 25,036 பேரும், நேற்று 12 பேரும் ஆக மொத்தம் 25,048 பேர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றில் 289 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, மாவட்டத்தில் பாதிப்புடன் 156 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். நமது கடலூர் மாவட்டத்தில் இருந்து, பிற மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு 29 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்