சர்வதேச போட்டியில் வென்ற பழநி மாணவர்களுக்கு வரவேற்பு :

By செய்திப்பிரிவு

நேபாளத்தில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று பழநி திரும்பிய மூன்று மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தோ- நேபாள் சர்வதேச சாம்பியன் ஷிப் போட்டி, மார்ச் 15ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நேபாளத்தில்நடைபெற்றது.

இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட போட்டியில் பழநி அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த மதன்குரு(18), நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ராகுல் (18), பழநியைச் சேர்ந்த தினேஷ் (18) ஆகியோர் 19 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான போட்டியில் பங்கேற்றனர்.

இதில் மதன்குரு 200 மீட்டர் ஓட்டத்திலும், ராகுல் பாக்ஸிங் போட்டியிலும், தினேஷ் 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியிலும் பங்கேற்று முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர். இவர்கள் மூவரும் பழநி திரும்பினர். பழநி பேருந்து நிலையத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் அம்மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்