தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கர்மவீரர் காமராசர் அரங்கில்நடந்தது.
உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன் தலைமை வகிக்க, பொதுச் செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் எஸ்.சித்ரா வரவேற்றார். கல்லூரிச் செயலாளர் சி.காளிராஜ், இணைச் செயலாளர்கள் கே.சுப்புராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் செல்லம் பாலசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: கல்வியோடு தனித்திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வேலைவாய்ப்பு, முன்னேற்றம், சமூக வாழ்வு போன்றவை ஏற்றமுடன் அமையும். சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால்மட்டுமே வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார். 718 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்ற 16 மாணவிகளுக்கு தங்கப்பதக்கமும், 2-ம் இடம்பெற்ற 14 மாணவிகளுக்கு பரிசுக் கோப்பையும் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago