தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் செந்தில்(41), ராஜேந்திரன், நவீன். இவர்கள் மூவரும் மஞ்சளாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணலை திருடிக் கொண்டு காமாட்சியம்மன் கோயில் அருகே வந்து கொண்டிருந்தனர். கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீஸார் செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர். வண்டியும், மணலும் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான மற்ற இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago